செம்மீசைச் சின்னான்

செம்மீசைச் சின்னான் அல்லது சிவப்புமீசைச் சின்னான் அல்லது செம்மீசைக் கொண்டைக்குருவி (Red-whiskered Bulbul, Pycnonotus jocosus) என்பது சின்னான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாடும் பறவையாகும். இவை பல மித வெப்பமுடைய ஆசிய பகுதிகளான புதிய இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பல இடங்களில் நன்றாக வாழ்கின்றன. இதன் தனிச்சிறப்புமிக்க கொண்டையையும் சிவப்பு நிறமான புழையையும் மீசையையும் கொண்டு இதனை இனங்காணலாம். இதன் கொண்டை காரணமாக இது கொண்டைக் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பறவை பழங்களையும் பூச்சிகளையும் முதன்மை உணவாகக் உட்கொள்கிறது.


வகுப்பு, தொகுப்பு முறையியல்


இவற்றை கரோலஸ் லின்னேயஸ் என்பவர் 1758-ல் அவர் பதித்த “இயற்கை முறைகள்” (Systema Naturae) என்னும் புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார். இவைகளை சின்னான்களோடு தொகுத்ததை இதுநாள்வரை கடைபிடிக்கின்றனர்.


உள்ளூர்ப்பெயர்கள்


இவற்றிற்கு டுராஹா தெலுகு மொழியில் பிக்லி-பிட்டா, வங்கத்தில் சிப்பாஹி புல்புல் (Sipahi bulbul), தாய்லாந்து மொழியில் கிரொங்-ஹுவா-ஜக் (Krong-hua-juk, กรงหัวจุก), இந்தியில் ஃபரி புல்புல் (Phari-bulbul) அல்லது கனேரா புல்புல் (Kanera bulbul) என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.


உருவமைப்பு


இப்பறவை 20 செ.மீ நீளம் இருக்கும். இப்பறவையின் அடிப்பகுதி வெண்ணிறத்திலும் மேற்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் வாழ்நாள் சுமார் 11 ஆண்டுகள் ஆகும்.


பரவல்


இது பரவியுள்ள பகுதிகளில் மலைக் காடுகளிலும் நகர்ப்புறங்களில் உள்ள தோட்டங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது.


குணாதிசயங்கள்


மரக்கிளைகளில் புலப்படாதவாறு அமர்ந்து கொண்டு பலத்த 3 அல்லது 4 அலைகளாக ஒலியை எழுப்புவதில் வல்லவை.


உணவு


இவை பெரும்பாலும் பழங்களை உண்டாலும், இவை அவ்வப்பொழுது சிறு பூச்சிகளையும் மலர்களில் தேனையும் உட்கொள்கின்றன. பாலுண்ணிகளுக்கு விடம் எனக்கருதப்படும் விதைகளையும் இவை உண்டு மகிழ்கின்றன.


இனவிருத்தி


இவைகளின் இனவிருத்திக்காலமானது வட இந்தியாவில் டிசம்பர் முதல் மே வரையிலும், தென்னிந்தியாவிலோ மார்ச் முதல் அக்டோபர் வரையுமாகும். இவை ஆண்டில் ஒரு முறையோ இரு முறைகளோ இனப்பெருக்கம் செய்யக்கூடும். ஆண்கள் தங்கள் கொண்டையை ஆட்டியும் தலை குனிந்தும், வாலை விரித்தும், சிறகுகளை காலருகே வைத்தும் கவர்கின்றன.


கூடு


கோப்பை வடிவிலான கூட்டினை இவை புதர்களிலும், சுவர்களிலும், சிறு மரங்களிலும் அமைக்கும். கூடுகள் சிரு சுள்ளிகள், வேர்கள், புற்களால் அமைப்பதோடு, பெரிய மரப்பட்டைகல், காகிதம், பிளாஸ்டிக் பைகளாலும் அலங்கரிக்கின்றன.


முட்டை


ஒவ்வொரு ஈனிலும் 2 முதல் 3 முட்டைகளை இடுகின்றன. முட்டைத்திருடர்களை திசைதிருப்ப பெண் பறவையினம் தான் அடிபட்டதைப்போல் நடிக்கும். தரையின் நிறத்தில் இருக்கும் முட்டைகளின் மீது புள்ளிகள் இருக்கும். இவை 16 முதல் 21 மில்லிமீட்டர் நீளம் இருக்கின்றன. 12 நாட்கள் வரை முட்டைகள் பொரியப்பிடிக்கும்.


குஞ்சுகளின் பராமரிப்பு


இருபாலினங்களும் குஞ்சுகளை பராமரிக்கின்றன. சிறு வயதில் புழு பூச்சிகளையும், வளர வளர விதைகளும் பழங்களும் குஞ்சுகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது. குஞ்சுகள் இறகுகளின்றி பிறக்கின்றன. காகங்களும், செண்பகமும் முட்டைகளையும், குஞ்சுகளையும் வேட்டையாடுகின்றன.


மனிதருடன் பரிமாற்றங்கள்


ஒரு காலத்தில் இவை இந்தியாவில் பல இடங்களில் விரும்பி வளர்க்கும் கூண்டுப்பறவையினமாக இருந்தது. C. W. ஸ்மித் என்பவர் தன் குறிப்பில் (Journal of the Asiatic Society of Bengal, பத்தாவது பிரதி, பக்கம் 640)) பின்வருமாறு எழுதியுள்ளார்:


தெற்காசியாவின் சில பகுதிகளில் இப்பறவை மனிதர்களால் பிடிக்கப்பட்டு செல்லப் பறவையாக கூண்டுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது..


வெளி இணைப்புகள்

செம்மீசைச் சின்னான் – விக்கிப்பீடியா

Red-whiskered bulbul – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *