தவிட்டுப்புறா (உயிரியல் பெயர்:Streptopelia tranquebarica) (Red Turtle Dove,Red Collared Dove), எனும் வலசைபோகும் புறா, செவ்வாமைப் புறா என்றும் அழைக்கப்படுகிறது.இந்த சிறும்புறா இனமானது சமவெளிப்பகுதிகளிலேயே அதிகம் வாழுகின்றன. பாறைகள் நிறைந்த இடங்களில் வாழுவதைத் தவிர்க்கின்றன. உலகின் கிழக்கு நாடுகளில் (oriential species) , இவைக் காணப்படுகின்றன. குறிப்பாக தீபகற்ப இந்தியாவிலும், தைவானிலும், பிலிப்பைன்சிலும் இவை அதிகமாகக் காணப்படுகின்றன.
வகைப்பாடு
பெரும்பான்மையான பறவையியல் அறிஞர்கள், Spilopelia என்ற பேரினத்தில், கள்ளிப்புறாவையும்(S. senegalensis ), புள்ளிப்புறா(S. chinensis)வையும் வகைப்படுத்துகின்றனர்.
சில பறவையியல் அறிஞர்கள், Streptopelia என்ற உயிரியல் பேரினத்தில், மேற்கூறிய இரண்டையும், அதோடு கீழ்கண்ட புறாக்களையும் வகைப்படுத்துகின்றனர்.
S. senegalensis கள்ளிப்புறா
S. tranquebarica (தவிட்டுப்புறா)
S. chinensis புள்ளிப்புறா
S. turtur (European Turtle Dove)
S. lugens (Dusky Turtle Dove)
S. hypopyrrha (Adamawa Turtle Dove)
S. orientalis (Oriental Turtle Dove)
S. bitorquata (Island Collared Dove)
S. decaocto (Eurasian Collared Dove)
S. roseogrisea (African Collared Dove)
S. reichenowi (White-winged Collared Dove)
S. decipiens (Mourning Collared Dove)
S. semitorquata (Red-eyed Dove)
S. capicola (Ring-necked Dove)
S. vinacea (Vinaceous Dove)
S. picturata Madagascar (Turtle Dove)
சிறப்புகள்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் முழுவதும் இது சாதரணமாகக் காணப்படுகின்றது.
கோடைக்காலங்களில் இவை பாகிசுத்தானிலுள்ள ஆப்கானிய எனும் வடமேற்குப் பள்ளத்தாக்கு இடங்களுக்கு, இனப்பெருக்கம் செய்ய இடப்பெயர்ச்சி செய்கிறது.
தமிழ்மருத்துவம்
ஓடுகரப் பான்சோபை உட்சொறிகா மாலைபித்தம்
ஆடு பெருமூச் சடைப்பும்போம் – நீடு
கவட்டுக் கலகவிழிக் காரிகையே நாளும்
தவிட்டுப் புறாக்கறிக்குத் தான்.
என்று கூறப்பட்டுள்ளன. புறாவின் இரத்தத்திற்கும் கறியின் குணம் இருக்கும். பொதுவாக, புறா வெப்பத்தன்மை கொண்டது. ஆகையால், காசம்,கபம்,வாதம், பித்தம், ஐயம் போன்ற நோய்களுக்கு ஏற்றதாக அறியப்பட்டுள்ளன.[சான்று தேவை]
வெளி இணைப்புகள்
தவிட்டுப்புறா – விக்கிப்பீடியா
Red collared dove – Wikipedia