ரிச்சர்டு நெட்டைக்காலி (Richard’s pipit – Anthus richardi) என்பது ஒரு நடுத்தர அளவுள்ள, (மரத்தை) அடையும் பாசரீன் வகைப் பறவை ஆகும். இவை வட ஆசியப்பகுதிகளின் திறந்த புல்வெளிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன; அங்கிருந்து இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியப்பகுதிகளுக்கு இவை நீண்ட தூரம் வலசை போகின்றன.
களக்குறிப்புகள்
நெட்டைக்காலிகளில் பெரியவை இவை. 17 – 20 செமீ நீளமும் 25 – 36 கி நிறையும் கொண்டவை. பெரும்பாலும் நிமிர்ந்து நிற்கும் வழக்கமுடைய மெல்லிய பறவை. தொந்தரவு செய்யப்படும் போது இறக்கைகளை ஆழமாக அடித்து எழும்பி, அதிக உயரத்துக்குச் செல்லும்.
உடல் தோற்றம்
வாழிடம்
வயல்கள், ஈர நிலங்கள், புல்வெளிகள், ஏரிகளை ஒட்டிய கரைப்பகுதிகள்
வெளி இணைப்புகள்
ரிச்சர்டு நெட்டைக்காலி – விக்கிப்பீடியா