மோதிர மூக்கு கடற்பறவை (Ring-billed gull, Larus delawarensis) என்பது நடுத்தரமான தோற்றத்தைக்கொண்ட கடற்பறவை ஆகும்.
விளக்கம்
இப்பறவை முதிர்ந்தவை 49 செ. மீ நீளமும். 124 செ.மீ அளவு இறக்கையோடு சேர்த்து நீளவாக்கில் அளவு கொண்டதாக உள்ளது. இதன் கழுத்தும் தலை, மற்றும் உடல் பகுதி வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. கண்கள் சிகப்பாகவும், விழிஓரங்கள் மஞ்சள் நிறத்திலும் காணப்படுகிறது.
சூழல் மற்றும் நடத்தை
இவைகளின் இனப்பெருக்கம் பொதுவாக ஏரிகள், குளங்கள் போன்றவற்றின் கரைகளிலும் கனடா ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் கடற்கரைகளிலும் நடக்கிறது. தீவுகளில் கூடு கட்டி பறவைகள் கூட்டமாக வாழுகின்றன. இவை எல்லா வருடங்களும் தன் துணையுடன் தான் வாழும் குணம் கொண்டது. இவை அமெரிக்காவின் வணிக வளாக வாகனம் நிறுத்தும் இடங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. இவை ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்கப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து தெற்கு நோக்கிச்சென்று மெக்சிகோ வளைகுடா, அட்லாண்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா, மற்றும் பசிபிக்கடலோர ஏரிகளுக்கும் செல்லுகிறது.
வெளி இணைப்புகள்
மோதிர மூக்கு கடற்பறவை – விக்கிப்பீடியா