சூறைக்குருவி

சோளப்பட்சி, ரோசா மைனா என அழைக்கப்பெறும் சூறைக்குருவி (Rosy starling, Sturnus roseus) சடர்னிடே குடும்பத்தைச் சேர்ந்த மரத்தை அடையும் பறவையாகும். இது நாகணவாய்ப்புள் குருவியின் பேரினத்தை அடுத்த பேரினமான சடர்னசு பேரினத்தைச் சேர்ந்ததாகும். இந்தியாவில் இது கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வதில்லை. ஆறிலிருந்து எட்டு முட்டைகள் வரை இட்டு ஆணும் பெண்ணும் சேர்ந்தே அடைகாக்கும் பழக்கம் கொண்டுள்ளது. வெட்டுக்கிளிகளை அதிகமாக உணவாக உட்கொள்கிறது. இதனால் இப்பறவையை விவசாயிகளின் நண்பன் என் அழைக்கிறார்கள். இப்பறவை மரங்களில் அடையும் பேஸ்ஸரின் (Passerine Birds) என்ற பறவை வகையச் சார்ந்ததாகும்.


தோற்ற விளக்கம்


சூறைக்குருவி மைனாவின் அளவுடையது; கருந்தலையும் கொண்டையும் இளஞ்சிவப்பு கலந்த வெள்ளுடலும் செம்மஞ்சள் நிற அலகு, கால்களும் உடையது.


விசித்திர குணம்


இப்பறவைகள் பறக்கும்போது கூட்டம், கூட்டமாக வானில் பல வடிவங்களில் பறந்து பல தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை வியப்படைய வைக்கிறது.


வலசை போதல்


வெளி நாடுகளிலிருந்து பல பறவைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிக்கும் வலசை வந்தாலும், தமிழ்நாடு மாநிலத்தில் வாழும் பறவையான இது இலங்கையில் உள்ள அம்பாந் தோட்டை, புத்தளம், மற்றும் கட்டுநாயக்க போனற பகுதிகளுக்குச் சென்று பிப்ரவரி, மற்றும் மார்ச் மாதங்களில் தங்கியிருந்துவிட்டு பின்னர் திரும்பிவருகின்றன. தமிழகத்துக்கு வந்து மே, சூன் மாதங்களில் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கிறது.


கலைச்சொற்கள்


 • மரத்தை அடையும் பறவை = Passerine (perching bird) | பேரினம் = genus

 • சிறகுத்தொகுதி = plumage |

 • வெளி இணைப்புகள்

  சூறைக்குருவி – விக்கிப்பீடியா

  Rosy starling – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.