புள்ளிச் சில்லை என்பது சில்லை எனப்படும் திணைக்குருவி வகையைச் சேர்ந்த சிட்டுக்குருவி அளவிலான ஒரு பறவை. இது ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. இது 1758-இல் லின்னேயசால் அறிவியல் முறைப்படி பெயரிடப்பட்டது.
இதன் மேற்புறம் பழுப்பாகவும் மார்பு, வயிற்றுப்புறம் செதில் போல் புள்ளிகளுடன் இருப்பதால் புள்ளிச் சில்லை எனப்படுகிறது. இதன் அலகு பெரிதாக கூம்பு வடிவத்தில் இருக்கும். இது புற்களின் கிழங்கினை உணவாகக் கொள்ளும். மேலும் சிறு பூச்சிகளையும் பழங்களையும் உண்ணும். இவை கூட்டமாக வாழும் தன்மையுடையன.
மேலும் இப்பறவைகள் இவற்றின் அழகிய தோற்றத்தின் காரணமாக செல்லப் பறவைகளாகவும் வளர்க்கப்படுகின்றன.
வெளி இணைப்புகள்
புள்ளிச் சில்லை – விக்கிப்பீடியா
Scaly-breasted munia – Wikipedia