இலங்கை தொங்கும் கிளி

இலங்கை தொங்கும் கிளி (Sri Lanka Hanging Parrot, Loriculus beryllinus) என்பது இலங்கையில் காணப்படும் சிறிய கிளியாகும்.


விபரம்


இலங்கை தொங்கும் கிளி சிறியதும், பச்சை நிறத்திலும் காணப்படும் இது குறுகிய வாலுடன் 13 செ.மீ நீளமுடையது. வளர்ந்த கிளி சிவப்பு நிறத்தில் முடியும் பிட்டமும் கொண்டு காணப்படும். பிடரி மற்றும் பின் புறத்தில் செம்மஞ்சல் காணப்படும். நாடியும் கழுத்தும் பளுப்பு நீல நிறத்திலிருக்கும். அலகு சிவப்பாகவும் விழித்திரைப்படலம் வெண்மையாகவும் இருக்கும்.


வளர்ச்சியடையாத கிளியின் பின்புறத்தில் செம்மஞ்சல் குறைவாகவும், பிட்டம் குறை நிறத்திலும், முடியில் குறைவான செம்மஞ்சலும் காணப்படும். போலியான நீல நிறத்தை தொண்டைப் பகுதியில் கொண்டும், செம்மஞ்சல் அலகும் பளுப்பு விழித்திரைப்படலம் கொண்டும் காணப்படும்.


வெளி இணைப்புகள்

இலங்கை தொங்கும் கிளி – விக்கிப்பீடியா

Sri Lanka hanging parrot – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.