உழவாரக் குருவி அல்லது உழவாரன் (Swift) பறவையானது அபோடிஎட் (Apodidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இப்பறவை பார்ப்பதற்கு தூக்கணாங்குருவி போன்று காணப்படும், ஆனால் இது பறந்து கொண்டே அதன் உணவைப்பிடிக்கும் பழக்கம் கொண்டது. இதிலிருந்து இரண்டுக்குமான வேறுபாடு காணப்படுகிறது. பார்ப்பதற்குக் கொஞ்சம் ரீங்காரப்பறவை போன்று காணப்பட்டாலும் ஹெமபிரிசிடி (Hemiprocnidae) என்ற ஒரு தனிக்குடும்பத்தச் சேர்ந்தது.
இப்பறவை தனது உணவைப் பிடிக்கச் செல்லும்போது கீழ்நோக்கி விமானம் போல் சென்று சிறு பூச்சிகளை லாகவமாகப் பிடித்து உண்ணுகிறது. இந்தப் பறவைக்கு இந்தப் பெயர் கிரேக்க மொழியிலிருந்து வந்தது ஆகும். இந்தப் பறவை இனங்களில் சிலவகைகள் விமானத்தைப்போல் வேகமாகப் பறக்கும் தன்மை கொண்டது ஆகும்.