வெண்புருவக் கொண்டலாத்தி

வெண்புருவக் கொண்டலாத்தி (ஆங்கிலம்: White-browed Bulbul) கொண்டை வகை பறவையாகும். இது இலங்கையிலும் இந்திய தீபகற்பத்திலும் வாழ்கின்றன. மேற்பகுதி ஒலிவ நிறத்திலும், கீழ்ப் பகுதி வெண்மையாகவும் காணப்படும். இதன் கண் புருவம் மங்கலாகவும் பின் புறம் மஞ்சளாகவும் காணப்படும். இவற்றின் வாழ்விடம் அடர்த்தியான குறுங்காடுகள். இங்கே இவை மறைந்து வாழும் இவற்றை காண்பது கடினம். ஆயினும் அவற்றின் பலத்த ஒலி மூலம் அவற்றின் இருப்பை கண்டுபிடித்துவிடலாம்.


விவரம்


வெண்புருவக் கொண்டலாத்தியின் நீளம் 20 செ.மீ (7 அங்குலம் 8) ஆகும். இவற்றின் மேற்பகுதி ஒலிவ நிறமும் கீழ்ப் பகுதி வெண்மையாகவும் இருக்கும். இப் பறவைகளின் வெண் கண் புருவம், கண்ணுக்கு கீழான வெள்ளை நிற பிறை வடிவம் மற்றும் மீசை போன்ற கரிய கோடு என்பனவற்றால் அடையாளம் காணலாம். பின்புறம் மஞ்சள் தன்மையுடனும் முகவாய் மஞ்சலாகவும் காணப்படும். தொண்டைப் பகுதி வெண்மையானது. பிடரியில் மூன்று அல்லது நான்கு மயிர் போன்றன தென்படும். இறகின் அமைப்பில் ஆணும் பெண்ணும் ஒருமித்தவை. இவை பலத்த ஒலியினை புதரின் மேலிருந்து எழுப்பி, புதரின் உள் சென்று மறைந்துவிடும்.


பரம்பலும் உறைவிடமும்


இப்பறவை வட இந்தியா மற்றும் இலங்கைக்குரிய பறவையாகும். இவை உலர்ந்த பரந்த கிராமப்புற குறுங்காடுகளிலும், அடர்த்தியான புதர்களுள்ள குறுங்காடுகளிலும் தோட்டங்களிலும் காணப்படும்.


பழக்கமுறையும் சூழலியலும்


வெண்புருவக் கொண்டலாத்தி தனியாகவும் சோடியாகவும் காணப்படும். இவை பழங்கள், மலர்த்தேன், புழு, பூச்சி என்பவற்றை உணவாகக் கொள்ளும். பங்குனி முதல் புரட்டாதி வரையான காலப்பகுதியில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இவை வருடத்தில் இரு தடைவைகள் குஞ்சு பொரிக்கும். மாசியும் புரட்டாதியும் இனப்பெருக்கத்தின் உச்ச காலமாகும். இவை மரக்கிளையில் இலகுவான கிண்ணம் போன்ற கூட்டினைக் கட்டி இரண்டு முட்டைகளை இடும். ஒரு பறவை 11 வருடங்களுக்கு மேல் வாழக் கூடியது.


வெளி இணைப்புகள்

வெண்புருவக் கொண்டலாத்தி – விக்கிப்பீடியா

White-browed bulbul – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.