பொரி உள்ளான் எனப்படும் பொரி மண்கொத்தி (Wood Sandpiper – Tringa glareola) ஒரு வலசை போகும் டிரிங்கா வகை உள்ளான். இவை நீளக் கால்கள் கொண்ட நடுத்தர அளவுள்ள கரைப்பறவைகளாகும். நன்னீர் ஏரிகளிலும் சதுப்புநிலங்களிலும் (ஈரநிலங்கள்) இவற்றைக் காணலாம். ஒரே உயிரியல் குடும்பத்தைச் சார்ந்த பவளக்காலியின் மிக நெருங்கிய உறவாக இப்பறவை உள்ளது.
உடல் தோற்றம்
ஆற்று உள்ளான் வேறுபாடு
பொதுவில் ஒன்று போலவே தென்படும் ஆற்று உள்ளானிலிருந்து (Green Sandpiper – Tringa ochropus) பொரி உள்ளானை வேறுபடுத்திக் காட்ட பின்வரும் களக்குறிப்புகள் உதவும்:
கள இயல்புகள்
மற்ற கரைப்பறவைகளை விட அதிகம் கூடிவாழ்கின்ற இயல்புடையது. சேற்றிலும் குறைவான நீருள்ள ஈரநிலங்களிலும் அலகால் பெருக்கியபடி உணவைப் பொருக்கி எடுக்கும். பனிக்கால உறைவிடங்களிலும் உரிமையை நிலைநாட்டுவதில் சண்டையிடும் குணமுடையது.
பரவல்
இந்தியா முழுவதும் பனிக்காலத்தில் காணப்படும். ஆகஸ்டில் வந்து ஏப்ரலில் தான் வலசை போகும்.
உணவு
மெல்லுடலிகள், பூச்சிகள், புழுக்கள்.
கூப்பாடு
மெல்லிய சிஃப்-இஃப்-இஃப் (chiff-if-if).
காணொளிகள்
கலைச்சொற்கள்
வலசை = migration; ஈரநிலம் = wetland; கரைப்பறவை = shore bird (or wader); முதிர்ந்த = adult; அடர்பழுப்பு = dark brown; புருவம் = supercilium; மெல்லுடலி = mollusc;