மரங்கொத்தி

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மடகாஸ்கர் மற்றும் தென் – வட முனைப்பகுதிகளைத் தவிர்த்து உலகெங்கும் காணப்படும் பறவையாகும். பெரும்பாலான சிற்றினங்கள் காடுகளிலும் மரங்கள் உள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. எனினும் சில இனங்கள் மரங்களற்ற பாறைப்பகுதிகளிலும் பாலைநிலங்களிலும் வாழ்கின்றன. மரங்கொத்திகளில் சுமார் 200 சிற்றினங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் ஏறத்தாழ 95 சதவீத மரங்கொத்திகள் மர வாழ் பறவைகள்.


மிகவும் கூர்மையான, வலுவான அலகுகளைக் கொண்ட இந்தப் பறவைகளுக்குப் மரங்களிலும் வாழும் பூச்சிகளே முக்கிய உணவு. இந்தப் பறவையின் நாக்கு நீளமாகவும், பசைத் தன்மை கொண்டிருப்பதாலும் தன் அலகு செல்ல முடியாத மரப்பொந்துகளில், தன் நாக்கை நீட்டி, அங்குள்ள பூச்சிகளைப் பிடித்து உண்ணும். பூச்சிகள் தவிர, பழங்கள், பருப்புகள், பூவிலிருக்கும் தேன் ஆகியவையும் இவை விரும்பி உண்ணும். மரங்கொத்திகள் மரத்தில் துளையிட்டு அதில் தங்களது குஞ்சுகளை வளர்க்கும். மரத்தை இவை கொத்தும்போது ஏற்படும் ஒலியைத் தவிர, தன் இனத்தைச் சேர்ந்த இதர பறவைகளுடன் தொடர்புகொள்ள மரத்தைத் தன் அலகால் தட்டித் தட்டி ஒலி எழுப்பக்கூடியன. குறிப்பாக, இனப்பெருக்கக் காலத்தில் இணையை ஈர்ப்பதற்காக இவ்வாறு அது ஒலி எழுப்பும். இவற்றால் ஒரு நாளைக்கு எட்டு ஆயிரம் முதல் 12 ஆயிரம் முறை, மரத்தைத் தன் அலகால் தட்டித் தட்டி ஒலி எழுப்ப முடியும்.


மரங்கொத்தி என்னும் விளையாட்டு தமிழ்நாட்டுச் சிறுவர் சிறுமியர்களால் தோப்புகளில் விளையாடப்படுகிறது.


வெளி இணைப்புகள்

மரங்கொத்தி – விக்கிப்பீடியா

Woodpecker – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.