மஞ்சள் குருகு

மஞ்சள் குருகு (yellow bittern, Ixobrychus sinensis) எனப்படும் மணல் நாரை அல்லது மஞ்சள் கொக்கு என்பது ஒரு சிறிய வகைக் குருகு. இவை இந்தியத் துணைக்கண்டத்தின் வட பகுதிகளிலும் ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் இனப்பெருக்கம் செய்கின்றன; பொதுவில் இவை வலசை போவதில்லை எனினும் வட பகுதிகளிலுள்ள சில பறவைகள் சிறிய தொலைவிற்கு உள்நாட்டு வலசை செல்கின்றன.


கள இயல்புகள்


உடல் தோற்றம்


செங்குருகைப் போன்று இதுவும் ஒரு சிறிய ஒல்லியான வகைக் குருகு; ஒட்டுமொத்த தோற்றத்தில் குருட்டுக் கொக்கு போல் இருந்தாலும், இது பறக்கும் போது இதன் மஞ்சள் கலந்த வெண் பழுப்பு நிற உடலும் கருத்த இறக்கைகளும் இதனை வேறுபடுத்திக் காட்டும்.


வளர்ந்த ஆண்


புதர் போன்ற கருத்த கொண்டை; பின்புறம் மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் உடையது. வால் சாம்பல் கலந்த கருமை நிறம் கொண்டது.


வெளி இணைப்புகள்

மஞ்சள் குருகு – விக்கிப்பீடியா

Yellow bittern – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *