மஞ்சள் கண் சிலம்பன் (yellow-eyed babbler) என்பது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை தெற்காசியாவில் காணப்படுகிறது.
விளக்கம்
இப்பறவைகள் சின்னான் பறவையைவிட சற்று சிறியதாகும். வால் சற்று நீளமானது. இதன் மேல்பகுதி பாக்கு நிறத்திலும்,அடிப்பகுதி வெள்ளையாகவும், கண்ணும், இமைகளும், மஞ்சள் நிறமாகவும், இருக்கும். இவை சிறு கூட்டமாக புல்வெளிகளிலும், புதர்களிலும் திரியக்கூடியவை.