ஆரப் புதர்ச்சிட்டு (Saxicola torquatus) என்பது புதர்ச்சிட்டுகளில் ஒருவகைப் பறவையாகும்.
விளக்கம்
இப்பறவைகளில் ஆண்பறவையின் கழுத்து கறுப்பு நிறமாகவும், மார்பு செம்மஞ்சள் கலந்த தவிட்டு நிறத்திலும், வெள்ளை நிற ஆரம்போன்ற கழுத்துப் பட்டையும் கொண்டிருக்கும். பெண்பறவைகள் புதர்ச்சிட்டை ஒத்திருந்தாலும், முதுகுபுறத்தில் வரிகள் இருக்கும்.