ஆந்தரகோசெரசு (Anthracoceros) என்பது புசெரோடிடே குடும்பத்தில் உள்ள இருவாட்சிப் பறவைகளின் பேரினமாகும்.
இந்த பேரினத்தை ஜெர்மன் இயற்கை ஆர்வலர் லுட்விக் ரீச்சன்பாக் 1849ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். இந்த மாதிரி இனம் பின்னர் மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி (ஆந்தரகோசெரசு கொரோனாட்டசு) என அழைக்கப்பட்டது. இதன் பெயரானது பண்டைய கிரேக்கத்தில் “நிலக்கரி கருப்பு” எனப்பொருள் படும் ανθραξ anthrax, ανθρακος anthrakos சொல்லிலிருந்தும் ”கொம்பு” எனப் பொருள்படும் κερας keras, κερως kerōs வார்த்தையிலிருந்து தோன்றியது. 2013ல் மூலக்கூறு வகைப்பாட்டியல் ஆய்வின் அறிக்கையின்படி ஆந்தரகோசெரசு பேரினம் மூன்று சாம்பல் இருவாச்சி சிற்றினமுடைய ஒசையோசெரசு பேரினத்தின் சகோதர பேரினமாக அறியப்பட்டது.
இந்த பேரினத்தில் ஐந்து இனங்கள் உள்ளன: