கருப்பு வயிற்று ஆலா

கருப்பு வயிற்று ஆலா (Black – bellied Tern, Sterna acuticauda) பெரிய ஆறுகளின் அருகே, இந்திய துணைகண்டதில் காணப்படும் ஆலா வகை பறவை.இப்பறவை பாக்கிஸ்தான், தென் சீனா, நேபாளம், தாய்லாந்து ,கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்னாம் வரை பரந்து காணப்படுகிறது.


உடலமைப்பு


33 செ.மீ. – முன்னதைவிட உருவில் சிறியது. குளிர்காலத்தில் கருப்பு நிற மார்பும் வயிறும் சாமபல் நிறமாகத் தோற்றம் தரும். இதன் வால் நன்கு பிளவுபட்டிருக்கும்.


காணப்படும் பகுதிகள் ,உணவு


ஆற்று ஆலாவைப்போல இது பரவலாகக் காணப்படுவதில்லை. நன்னீர் பரப்பிலே ஆறுகளின் மேலும் ஏரிகளின் மீதும் காற்றை எதிர்த்துப் பறந்து கொஞ்ச தூரம் சென்றதும் மீண்டும் திருப்பிப் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும். இவ்வாறு பறக்கும் இதன் பழக்கமே ஒன்றைப்பெற அலைபவனைப்பற்றிக் குறிப்பிடும் போது ஆலாய்ப் பறக்கிறான் என்ற வழக்கு பிறக்கக் காரணம். நீரில் தலைகீழாகப் பாய்ந்து மூழ்கி மீனைப் பிடிப்பதோடு நீர்ப்பரப்பை ஒட்டிப் பறந்தும் மீனைப் பிடிக்கும். பறக்கும் போது கொக்கொக் எனக் குரல் கொடுக்கும்.


இனப்பெருக்கம்


பிப்ரவரி முதல் ஏப்ரல் முடிய ஆற்றில் மணல் மேடுகளில் சிறிதே மணலைப் பறித்து குழியை உண்டாக்கி 3 முட்டைகளை இடும். வெய்யிலிருந்து முட்டைகளையும் குஞ்சுகளையும் காக்கப் பெற்றோர் இறக்கை விரித்து நிழல் செய்தும் மார்பைத் தண்ணீரில் நனைத்து வந்து முட்டைகளை ஈரப்படுத்தியும் பாதுகாக்கும்.


வெளி இணைப்புகள்

கருப்பு வயிற்று ஆலா – விக்கிப்பீடியா

Black-bellied tern – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.