கறும்பிடரி ஆலா (Black-naped tern)(இசுடெர்னா சுமத்ரானா) என்பது பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் கடல்சார் பறவையாகும். ஆலா உள்நாட்டில் அரிதாகவே காணப்படுகிறது.
விளக்கம்
ஆலா சுமார் 30 செ.மீ நீளமுடையது. இதனுடைய இறகின் நீளம் 21 முதல் 23 செ.மீ. நீளமுடையது. இவற்றின் அலகு மற்றும் கால்கள் கருப்பு நிறமுடையன. ஆனால் இவற்றின் அலகுகளின் நுனிப்பகுதி மஞ்சள் நிறமுடையது. இவை பிளவுபட்ட நீண்ட வால் இறகுகளைக் கொண்டுள்ளது. கறும்பிடரி ஆலா வெள்ளை முகம் மற்றும் மார்புடன் சாம்பல்-வெள்ளை முதுகு மற்றும் இறக்கைகளைக் கொண்டது. இவற்றின் முதன்மை இறகுகளில் முதல் இணை சாம்பல் நிறமானது.
அங்கீகரிக்கப்பட்ட இரண்டு துணையினங்கள் உள்ளன:
வெளி இணைப்புகள்
கறும்பிடரி ஆலா – விக்கிப்பீடியா