பச்சைக்காலி

பச்சைக்காலி (Common Green Shank) என்பது ஒரு வகை உள்ளான் ஆகும். இது உள்ளான்களிலேயே உருவில் பெரியது. இந்த உள்ளான் கரையோரப் பறவை வகையினைச் சார்ந்தது.


பெயர்கள்


தமிழில் :பச்சைக்காலி ஆங்கிலப்பெயர் :Common Greenshank அறிவியல் பெயர் :Tringa nebularia


உடலமைப்பு


இதனுடைய உடல் நீளம் 36 செ.மீ. வரை இருக்கும் இது பச்சை நிற அலகினையும் கால்களையும் கொண்டது. உள்ளான்களிலே உருவில் பெரியது. சாம்பல் தோய்ந்த பழுப்பு நிற உடலைக் கொண்ட இதன் தலை, பின் முதுகு, பிட்டம், வால் மார்பு, வயிறு ஆகியன வெண்மை நிறம் கொண்டவை.


காணப்படும் பகுதிகள் ,உணவு


இவை குளிர் காலம் தொடங்குவதற்கு முன்பே ஆகஸ்ட் மாதத்தில் வலசை போகத் தொடங்கும். இதனைத் தமிழகம் எங்கும் ஏரி, ஆறு இவற்றின் படுகைகளிலும் கடற்கரைகளிலும் காணலாம். தனித்தும் மூன்று முதல் ஐந்து வரையான சிறு குழுவாகவும் நீரில் இறங்கி, நத்தை, நண்டு புழு பூச்சிகள், தவளைக் குஞ்சு ஆகியவற்றை இரையாகத் தேடி உண்ணும். ட்டீவி, ட்டீவி, ட்டீவி எனக்குரல் கொடுத்தப்படி எழுந்து பறக்கும்


இனப்பெருக்கம்


மார்ச் மத்தியில் இனப்பெருக்கம் துவங்கும். இனப்பெருக்க பருவத்திற்குரிய காலத்திற்கான வண்ண நிறங்கள் உடலில் தோன்றத் தொடங்கும். ஏப்ரல் மத்தியில் தொலைதூரம் பறப்பதற்கு தேவையான சக்தியைத்தரும் கொழுப்பு உடலில் சேமிக்கத் தொடங்க, உடல் பருமனாகத் தோன்றும். அப்போது இவை பெருங்கூட்டமாக ஒன்று திரண்டு பறக்கும்.


படங்கள்

வெளி இணைப்புகள்

பச்சைக்காலி – விக்கிப்பீடியா

Common greenshank – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.