கர்லூ உள்ளான் (Curlew sandpiper) இப்பறவை உள்ளான் வகையைச் சேர்ந்த பறவையாகும். இதன் பூர்வீகம் இந்தியப்பகுதியாக இருந்தாலும் உலகில் பல பகுதிகளிலும் சுற்றிவருகிறது. இவற்றில் முக்கியமாக ஆர்க்டிக், மற்றும் ஆப்பிரிக்கா தென்மேற்கு ஆசியா போன்ற இடங்களில் பார்க்க கிடைக்கிறது. மேலும் வட அமெரிக்காவிலும் இப்பறவைக் காணமுடிகிறது. இதன் கால் பகுதி குட்டையாகவும், அலகு நீட்டமாகக் காணப்படுகிறது. இனப்பெருக்க காலங்களில் ஆண் பறவை பெண் பறவையைக் கவர வானில் வட்டமிட்டு பல வித்தைகள் காட்டுகிறது. இப்பறவை 3 முதல் 4 முட்டைகள் வரை இடுகின்றன. இந்தியாவில் இப்பறவை பெருவாரியாக அழிக்கப்பட்டு வருகிறது என்று பறவைகள் பாதுகாப்பு சங்கம் கூறுகிறது.
About the author
Related Posts
October 4, 2021
சாம்பற் சிட்டு
October 11, 2021
இந்திய மயில்
July 12, 2021