சின்ன உழவாரன்

சின்ன உழவாரன் என்பது இந்தியாவில் காணப்படும் ஒரு உழவாரன் ஆகும்.


பெயர்கள்


தமிழில் :சின்ன உழவாரன்


ஆங்கிலப்பெயர் :Indian Edible /Nest swiftlet


அறிவியல் பெயர் :collocal’s unicolors


உடலமைப்பு


12 செ.மீ. – கரும்பழுப்பு நிறத்தையுடைய மெலிந்த உடலும் சிறிதே பிளவுபட்ட வாலும் கொண்ட இது வௌவால்கள் போல வேகமாக இறக்கை அடித்துப் பறக்கும்.


காணப்படும் பகுதிகள் , உணவு


மேற்கு, கிழக்குக் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில் சமவெளி முதல் 2000 மீ. உயரம் வரை காணலாம். மலைகளில் இயற்கையாக அமைந்த குகைகள், மலைகளில் அமைந்த கட்டிடங்கள் ஆகியவற்றில் இரவில் பெருங்கூட்டமாகத் தங்கும் பொழுது புலரும் முன் பெருத்த ஆரவாரத்துடன் அவ்விடங்களை விட்டுப் புறப்படும். இரவில் இரைத்தேடித் திரும்பும் வௌவால்களுக்கு இடத்தை விட்டுக் கொடுத்து புறப்படுவதுபோல இந்நிகழ்ச்சி தோற்றம் தரும். மாலையில் சுழல்காற்றில் சுற்றிச் சுழன்று உயர எழுந்து பறக்கும். உதிர்ந்த இலைச் சருகுகளைப் போலப் பெருங்கூட்டமாக வட்டமடித்துச் சுழன்று பறந்தபடி புறப்பட்ட இடத்தை நோக்கி இரவைக் கழிக்கத் திரும்பும். பறக்கும் பூச்சிகளே இதன் முக்கிய உணவு. இரவில் தங்கியுள்ள இடத்தில் சிட்.. சிட்.. எனச் சிறுகுரல் எழுப்பும்.


இனப்பெருக்கம்


மார்ச் முதல் சூன் முடிய பாறைகளிலும் கட்டிடங்களின் கூரையிலும் வாயிலிருந்து வெளிப்படும் உமிழ்நீரைக் கெட்டியாக்கி அத்துடன் தூவிகள், புல், பாசி ஆகியவற்றைச் சேர்ந்து சிப்பி வடிவிலான கூடு அமைத்து 2 முட்டைகளிடும்.


வெளி இணைப்புகள்

சின்ன உழவாரன் – விக்கிப்பீடியா

Edible-nest swiftlet – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.