பெரிய கோட்டான் ஒரு கரையோரப்பறவையாகும் இது ஸ்கோலோபாசிடே குடும்பத்தை சார்ந்த கோட்டான்.
பெயர்கள்
தமிழில் :பெரிய கோட்டான்
ஆங்கிலப்பெயர் :Eurasian Curlew
அறிவியல் பெயர் : Numenius arquata
உடலமைப்பு
58 செ.மீ. – மணல் பழுப்பு நிறம் கொண்ட உடலில் ஒரே சீரான செம்மஞ்சள் கோடுகளைக் கொண்டது. இதன் மார்பும் வயிறும் வெண்மையாகக் கருப்புக் கோடுகளைக் கொண்டது. ஒட்டு மொத்த தோற்றத்தில் முன்னதை ஒத்த இது உருவில் பெரியது. இதன் தலையில் உள்ள வெண்பட்டைகளைக் கொண்டும் கரும் பழுப்பாக இல்லாமல் மணல் பழுப்பான உடலில் நிறம் கொண்டும் இதனை எளிதில் வேறு படுத்தி அறியலாம்.
காணப்படும் பகுதிகள் ,உணவு
குளிர்காலத்தில் வலசை வரும் இதனை. கடற்கரை நெடுகிலும் உள்நாட்டில் நீர் நிலைகளிலும் ஆங்காங்கே காணலாம். வேடந்தாங்கலில் காணப்பட்ட குறிப்பு உள்ளது. பழக்க வழக்கங்கள் கோட்டானை ஒத்தன. எனினும் அதனைப் போலப் பெருங்குழுவாகத் திரிவதில்லை. தனித்தும் ஆறு வரையான சிறு குழுவாகவும் காணலாம். நெருங்கிப் பார்க்க இயலாதபடி அச்சங்கொண்டு பறந்து செல்லும் இயல்பினது. பறக்கும் போது கர்லூ கர்லூ எனக் குரல் கொடுக்கும்