மூக்கன் பறவை

மூக்கன் அல்லது பேருள்ளான் எனப்படும் காட்விட் (Godvit) என்னும் பறவை லிமோசா (limosa) இனத்தைச் சேர்ந்தது. இவை இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும். ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ ஒருமுறை கூட பயணத்தை முறிப்பதில்லை. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தனது உடல் எடையில் 0.41 சதவீதம் அளவு உணவைக் கிரகித்துக் கொண்டு புயல் வேகத்தில் பயணத்தை மேற்கொள்கிறது.


ஒவ்வொரு இலையுதிர்க் காலத்திலும் அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்துக்கு எட்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறது காட்விட் பறவை. வசந்த காலம் வந்ததும் மறுபடி நியூசிலாந்தில் இருந்து அலாஸ்காவுக்கு 11 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்கிறது. மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இவை பறப்பதற்குக் குறைவான சக்தியையே பயன்படுத்துகின்றன. காட்விட்’ பறவைக்குச் சக்தியை அளிப்பது கொழுப்பும், புரதமும்தான். காற்றின் எதிர்ப்பைக் குறைக்கும் ஏரோடைனமிக் உடல் அமைப்பும் உதவுகிறது.


வெளி இணைப்புகள்

மூக்கன் பறவை – விக்கிப்பீடியா

Godwit – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *