கருங்கொண்டை முக்குளிப்பான்

கருங்கொண்டை முக்குளிப்பான் அல்லது கருங்கொண்டை பெரிய முக்குளிப்பான் ஒரு நீர்ப்பறவை. இது இனப்பெருக்கக்காலத்தில் தான் சேரவிருக்கும் இணையுடன் புரியும் காதல் நடனம் புகழ்பெற்றது. இப்பறவையின் அறிவியற்பெயர் பொடிசெப்சு கிறித்தாத்தசு (Podiceps cristatus). இலத்தீனில் cristatus எனில் கொண்டையுடையது என்று பொருள். Podiceps என்பது கால்கள் உடலின் பின்பகுதிப் பக்கத்தில் உள்ளதைக் குறிக்கின்றது. இது முக்குளிப்பான் (grebe) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை.


விளக்கம்


கருங்கொண்டை முக்குளிப்பான் முக்குளிப்பான் வகைப் பறவைகளைலேயே பெரிய உடல் கொண்டவொன்று, ஆகவே இதனைப் கருங்கொண்டைப் பெரிய முக்குளிப்பான் என்றும் சொல்லலாம். இது பழைய உலகம் எனக்கூறப்படும் ஆப்பிரிக்க, ஐரோப்பிய ஆசிய நிலப்பகுதியிலும், அமெரிக்காவிலும் காணப்படுகின்றது. இதன் உடல் அளவு 46–51 cm (18–20 in) நீளமும் 59–73 cm (23–29 in) இறக்கை விரிப்பளவும், எடை 0.9 முதல் 1.5 kg (2.0 முதல் 3.3 lb).யும் கொண்டது. மிகச்சிறந்த நீஞ்சுதிறனும், நீருள் பாய்ந்து மீன் முதலான இரையைத் தொடரும் வலிமையும் கொண்டது. நீருள் மூழ்கி எழுவதால் இதற்கும் இதைப்போன்ற பறவைகளுக்கும் முக்குளிப்பான் என்று பெயர். கோடைக்காலத்தில் இதன் கழுத்தும் தலையும் அளிக்கும் தோற்றத்தால் எளிதாக அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். குளிர்காலத்தில் மற்ற முக்குளிப்பான்களைக் காட்டிலும் வெண்மையாக விருக்கும், குறிப்பாக கண்ணுக்கு மேல். அலகும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.


இப்பறவையின் குஞ்சுகளை எளிதாக அடையாளங்காணலாம், ஏனெனில் இவற்றின் தலை கறுப்பும் வெள்ளையுமாக வரிவரியாக இருக்கும். வளர்ந்த பறவையான பின்பு இவை மறைந்துவிடுகின்றன.


வாழிடப் பரவல்


கருங்கொண்டைப் பெரிய முக்குளிப்பான்கள் நன்னீர் ஏரியருகே செடிகொடிகள் இருக்குமிடத்தில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இவ்வினத்தின் ஒரு சிற்றினம் (P. c. cristatus) ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் காணப்படுகின்றன. இவை குளிர்காலத்தில் இடம்பெயர்வன. ஆனால் ஆப்பிரிக்கச் சிற்றினமான P. c. infuscatus என்னும் பறவையும் ஆத்திரேலாசியச் சிற்றினமான P. c. australis என்பதும் இடம்பெயர்வதில்லை.


நடத்தை


இந்தக் கருங்கொண்டைப் பெரிய முக்குளிப்பான்கள் இனப்பெருக்கக் காலத்தில் மிகவும் ஏற்பாடாக காதல்நடம் புரிகின்றன. மற்ற முக்குளிப்பான்களைப் போலவே இவை நீரின் அருகே கூடுகட்டி வாழ்கின்றன. இப்பறவையின் கால்கள் இவற்றின் உடலின் பின்புறத்தே அமைந்துள்ளதால் அதிக தொலைவு நிலத்தில் நடக்கவியலாது. பெரும்பாலும் இரண்டு முட்டைகள் இடுகின்றன, இதன் பார்ப்புகள் (குஞ்சுகள்) பிறக்கும்பொழுது புசுபுசுவென்று பூப்பந்துபோல இருக்கும். பார்ப்புகளை தங்கள் முதுகின்மேல் ஏற்றிக்கொண்டு இப்பறவைகள் நீரில் நீஞ்சிச் செல்லும். தாய்ப்பறவையும் தந்தைப் பறவையும் தங்களுக்குப் பிடித்த குஞ்சுகளுக்கு மட்டும் முக்குளித்தல் முதலான நீரில் உலவும் திறன்களைக் கற்றுத்தரும்.

வெளி இணைப்புகள்

கருங்கொண்டை முக்குளிப்பான் – விக்கிப்பீடியா

Great crested grebe – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *