கோரை உள்ளான்

கோரை உள்ளான் (Jack Snipe; Lymnocryptes minimus) 21 செ.மீ. உடலின் மேற்பகுதி பசுமையும் ஊதாவும் தோய்ந்தது. தலையிலும் கண்களை அடுத்தும் வெண்பட்டைகளைக் காணலாம். மார்பில் பழுப்புத் திட்டுகள் உண்டு. வயிறும் வாலடியும் வெண்மை.


காணப்படும் பகுதிகள்


குளிர் காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் வலசை வரும் இது சகதியும் சேறுமாக உள்ள அறுவடை முடிந்த வயல்கள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றில் காணப்படும்.


உணவு


சிறு நத்தைகள், புழு பூச்சிகள் ஆகியவற்றோடு சதுப்பு நிலத் தாவரங்களில் விதைகளையும் தேடித்தின்னும். வேட்டைக்காரர்கள் ஆரவாரம் செய்து துரத்தும்போது கடைசி வரை புதரிலிருந்து வெளிப்படாது பதுங்கியிருந்து பின் எழுந்து சற்றுத் தொலைவு பறந்து புதரிடையே பதுங்கும்.


இராமநாதபுரம் பெரியகண்மாயைச் சார்ந்த பகுதியில் இப் பறவைகள் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கரையில் மேற்கொள்ளப்படுவது போல தென்மாவட்டங்களின் மீது அதிக கவனம் செலுத்தினால் வலசை வரும் பறவைகள் பற்றிய பல விவரங்கள் மேலும் வெளிப்படும்.


வெளி இணைப்புகள்

கோரை உள்ளான் – விக்கிப்பீடியா

Jack snipe – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *