கள்ளிப்புறா

கள்ளிப்புறா(உயிரியல் பெயர்:Stigmatopelia senegalensis) (Laughing Dove), சிரிக்கும் புறா என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறியவகை புறா இனத்தைச் சார்ந்தது.ஆப்பிரிக்காவின் தெற்கு சகாராப் பகுதிகளிலும், அரபு நாடுகளிலும், கிழக்கு ஆசிய கண்டத்தில் இருந்து இந்தியா வரையிலும், மேற்கு ஆசுத்திரேலியாவிலும் காணப்படுகிறது. அந்தந்த பகுதிகளில் செவ்வனே இனப்பெருக்கமும் செய்யும் இயல்புடையதாக இருக்கிறன.இதன் எடை 100 கிராம் அளவில் உள்ளது.


வகைப்பாடு


 • பெரும்பான்மையான பறவையியல் அறிஞர்கள், Spilopelia என்ற உயிரியல் பேரினத்தில், கள்ளிப்புறாவையும்(S. senegalensis ), புள்ளிப்புறா(S. chinensis)வையும் வகைப்படுத்துகின்றனர்.

 • சில பறவையியல் அறிஞர்கள், Streptopelia என்ற உயிரியல் பேரினத்தில், மேற்கூறிய இரண்டையும், அதோடு கீழ்கண்ட புறாக்களையும் வகைப்படுத்துகின்றனர்.

 • S. senegalensis கள்ளிப்புறா

 • S. tranquebarica (தவிட்டுப்புறா)

 • S. chinensis புள்ளிப்புறா

 • S. turtur (European Turtle Dove)

 • S. lugens (Dusky Turtle Dove)

 • S. hypopyrrha (Adamawa Turtle Dove)

 • S. orientalis (Oriental Turtle Dove)

 • S. bitorquata (Island Collared Dove)

 • S. decaocto (Eurasian Collared Dove)

 • S. roseogrisea (African Collared Dove)

 • S. reichenowi (White-winged Collared Dove)

 • S. decipiens (Mourning Collared Dove)

 • S. semitorquata (Red-eyed Dove)

 • S. capicola (Ring-necked Dove)

 • S. vinacea (Vinaceous Dove)

 • S. picturata Madagascar (Turtle Dove)

 • சிறப்புகள்


 • இப்புறாவானது, சிறும்புறா இனமாகும்.நீளமான இறகுகளை உடைய இவை, அளவு 25 செ.மீ. இருக்கும். இறக்கைகளும், வாலும் சிவப்பு கலந்து பழுப்பு நிறத்திலும், இறக்கையில் சாம்பல் நிறமும் கலந்து இருக்கும்.தொண்டையில் கரும்புள்ளிகள் காணப்படுகிறது. தலைப்பகுதி இளஞ்சிவப்பிலும், வயிற்றுப் பகுதியில் வெள்ளைநிறப்பரவலும் அமைந்துள்ளது.

 • இவை குச்சிக்களைக் கொண்டு, கூடுகளை, மரத்தின் மேற்புறத்திலேயேக் கட்டுகின்றன. தனது இணையுடன் கடைசி வரையில் வாழ்கிறது.

 • விதைகள், புற்கள், தானியங்களை பெரும்பாலும் உண்ணுகின்றன. அவ்வப்பொழுது, சிறு பூச்சிகளையும் உண்ணுகின்றன.

 • வெள்ளை நிறத்தில், இரு முட்டைகளை மட்டுமே இடுகின்றன.

 • வெளி இணைப்புகள்

  கள்ளிப்புறா – விக்கிப்பீடியா

  Laughing dove – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.