சின்னக் காணான் கோழி (Little Crake) இது நீர் நிலைகளில் வாழும் சிறிய காணான்கோழி குடும்பத்தைச் சார்ந்த பறவை இனம் ஆகும். இப்பறவைக்கான அறிவியல் பெயர் வெனிசு நாட்டினரால் கொடுக்கப்பட்டதாகும். இதில் சின்ன என்ற சொல் இலத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
இனப்பெருக்கத்தை இப்பறவை ஐரோப்பா நாட்டின் புல் படுக்கைகளில் வைத்துக்கொள்கிறது. மேலும் இவை அதிக அளவில் கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் காணப்படுகிறது. குளிர்காலங்களில் இவை ஆப்பிரிக்காவின் பகுதிகளுக்கு தனது இருப்பிடத்தை நகர்த்திக் கொள்கிறது.
புள்ளி காணான் கோழியை விட கொஞ்சம் சிறியதாக 17- 19 செ.மீற்றர்கள் கொண்டு காணப்படுகிறது. இவற்றில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிய அளவில் வேற்றுமை காணப்படுகிறது.
வெளி இணைப்புகள்
சின்னக் காணான் கோழி – விக்கிப்பீடியா