சின்ன பச்சைக்காலி

சின்ன பச்சைக்காலி ஆங்கிலத்தில் Marsh Sandpiper என அழைக்கப்படுகிறது இது உள்ளான்களில் ஒரு சிறிய வகையாகும்.


பெயர்கள்


தமிழில் :சின்ன பச்சைக்காலி


ஆங்கிலப்பெயர் :Marsh Sandpiper


அறிவியல் பெயர் :Tringa stagnatillis


உடலமைப்பு


25 செ.மீ. – சாம்பல் பழுப்பு நிற உடல் கொண்ட இதன் முன் நெற்றி, கண்புருவம், தலையின் பக்கங்கள், பின்முதுகு, பிட்டம் ஆகியனவும், மார்பு, வயிறு, வாலடி ஆகியனவும் தூய வெள்ளை நிறங் கொண்டவை.


காணப்படும் பகுதிகள் ,உணவு


குளிர்காலத்தில் வலசை வரும் இதனைக் குளங்கள், ஏரிகள் ஆகியவற்றின் நீர்ப்பரப்பின் ஓரங்களிலும் நீர்தேங்கி நிற்கும் நெல்வயல்களிலும் பரவலாகக் காணலாம். சிறிது உப்பான நீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரும்பித் திரிவது. ஆகஸ்ட் இறுதியில் வரத் தொடங்கும் இவை மே முதல் வாரத்தில் திரும்பிவிடும். இனப் பெருக்கம் செய்வதில் ஈடுபடாத சில, கோடையிலும் இங்கே தங்கிவிடுகின்றன. 1962இல் கோடியக்கரையில் காலில் வளையம் அணிவிக்கப்பட்ட இரு பறவைகள் 5100 கி.மீ. தொலைவுக்கு அப்பால் ரஷ்யாவில் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளன. தலையும் அலகும் முழுவதும் மூழ்கும்படி நீர் பரப்பில் இறங்கி இரை தேடவும் செய்யும். சிறுநத்தை, புழு பூச்சிகள் இதன் முக்கிய உணவு எழுந்து பறக்கும் போது ச்சீ வீப், ச்சி வீப் எனக் குரல் கொடுக்கும்.


படங்கள்

வெளி இணைப்புகள்

சின்ன பச்சைக்காலி – விக்கிப்பீடியா

Marsh sandpiper – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *