கோணமூக்கு உள்ளான்

கோணமூக்கு உள்ளான் (pied avocet – Recurvirostra avosetta) என்பது ஒரு பெரிய கருப்பு வெள்ளை கரையோரப் பறவை ஆகும். இவை மிதவெப்பமண்டல ஐரோப்பிய, மேற்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இது ஒரு வலசை போகும் பறவை இனம் ஆகும். மேலும் இவை குளிர்காலம் முழுவதையும் ஆப்பிரிக்க மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளில் கழிக்கின்றன.


வகைப்பாட்டியல்


கோணமூக்கு உள்ளான் கரோலஸ் லின்னேயஸ் எழுதிய முக்கியமான நூலான இசுசிசுடமா நாடுரே (Systema Naturae)வில் விவரிக்கப்பட்ட பல பறவை இனங்களில் ஒன்றாகும் .இப்பறவை அவோசெட்டா என்ற வெனிசியச் சொல்லிலிருந்து அதன் ஆங்கில மற்றும் அறிவியல் பெயர்களைப் பெறுகின்றது.


உணவு


கோண மூக்கு உள்ளான்கள் பூச்சிகள், சிறிய நீர் ஓட்டுமீன்கள் (Crustaceans) , சிறிய மீன்கள், நீர்வாழ் முதுகெலும்பற்ற உயிரினங்கள உணவாக்கிக் கொள்ளும்.


கூடு


இவ்வகை உள்ளான்ங்கள் தங்களின் கூடுகளை மண், சேறு மற்றும் சிறிய தாவரங்களை வைத்து தரையில் அமைக்கும். ஒரே குடியேற்றத்தினுள் அமைக்கப்படும் கூடுகள் பெரும்பாலும் 1 மீ. தொலைவில் இருக்கும். இனப்பெருக்க காலத்தின் போது ஆண் பறவையும் பெண் பறவையும் சேர்ந்தே இருக்கும்.


வெளி இணைப்புகள்

கோணமூக்கு உள்ளான் – விக்கிப்பீடியா

Pied avocet – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *