செங்கழுத்து உள்ளான் 19 செ.மீ. – உள்ளானைப் போலத் தோற்றம் தரும் இது குட்டைகள், உப்பங்கழிகள், கடல் ஆகியவற்றில் நீந்திக் கொண்டிருக்கக் காணலாம். குளிர்காலத்தில் வலசைவரும் போது படத்தில் உள்ளது போல நீல நிற உடலும், வெண்மையான மார்பும், வயிறும் கொண்டதாகக் காட்சி தரும். ஏப்ரலில் வடக்கே திரும்பும் முன், கழுத்தில் சிறிது செம்மை தோன்றும்.
காணப்படும் பறவைகள்
கடற்கரைகளிலும் கடற்கரை சார்ந்த ஆழமற்ற நீர்நிலைகளிலும் ஆங்காங்கே காணலாம். கோடிக் கரையில் காணப்பட்ட குறிப்பு உள்ளது. 20 முதல் 100 வரையான கூட்டமாகக் கடலில் நீந்தித்திரியும். படகுகள் நெருங்கும் போது கூட்டமாக எழுந்து பறந்து தொலைவில் சென்று அமர்ந்து கொள்ளும்.
உணவு
உப்பங்கழிகள் ஏரிகள் ஆகியவற்றில் கூட்டமாக நீந்தியபடி இரைதேடும் இது நீரில் சுற்றிச் சுழன்றும் வட்டமடித்தும் தன்னை நெருங்குபவர்களைப் பற்றி கவலைப்படாது இரை தேடியபடி இருக்கும். பிளேங்டன், பூச்சிகள் அவற்றின் முட்டை ஆகியவற்றைக் கடல் நீரிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் தேடித்தின்னும் ஒன்றோடு ஒன்று நெருங்கியபடி கூட்டமாக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு பறக்கும்.
வெளி இணைப்புகள்
செங்கழுத்து உள்ளான் – விக்கிப்பீடியா
Red-necked phalarope – Wikipedia