காண்டாமிருக இருவாச்சி (Buceros rhinoceros) என்னும் பறவை ஆசியப்பறவைகளிலேயே மிகப் பெரிய அலகு கொண்டது. இதன் அலகானது 91–122 செ.மீ (36–48 அங்குலம்) நீளமானது. பழங்களைப் பறிப்பது, கூடுகட்டுவது, குஞ்சுகளுக்கு உணவூட்டுவது என்று பல வேலைகளை இந்தப் பறவை தனது அலகைக் கொண்டு செய்கிறது. தன் இணையை அழைப்பதற்கு இப்பறவை குரல் கொடுக்கும்போது, இந்த அலகுக் குரலை அதிக தொலைவுக்கு எதிரொலிக்க வைக்கிறது. காண்டாமிருகத்தின் கொம்புபோல இப்பறவையின் அலகின்மீது ஒரு கொம்பு இருப்பதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. 90 ஆண்டுகள்வரை உயிர் வாழக்கூடிய[சான்று தேவை] இப்பறவை போர்னியோ தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேசியத் தீபகற்பம், சிங்கப்பூர், தெற்கு தாய்லாந்து போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.
இது மலேசிய நாட்டின் தேசியப் பறவையும் ஆகும்.
தோற்றக்குறிப்பு
இது மரத்தில் வாழக்கூடிய ஒரு பெரிய இருவாச்சிப் பறவை, 80 to 90 cm (31–35 in) நீளமுடையது. ஆண் பறவைகள் 2,465 to 2,960 g (87.0–104.4 oz) எடையும் பெண் பறவைகள் 2,040 to 2,330 g (72–82 oz) வரையும் இருக்கும். இது பெரும்பாலும் கருப்பாகவும் கால்கள் வெள்ளையாவும் வாலானது ஒரு கருப்புப் பட்டையுடன் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதனுடைய பெரிய அலகு இளஞ்சிவப்பு, சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் பின்புழையில் உள்ள பிரீன் சுரப்பியில் இருந்து வரும் பிரீன் எண்ணெய் பறவையின் அலகுகளுடன் உராய்ந்து அலகுகள் இந்த நிறம் பெறுகின்றன. ஆண் பறவைகளின் கண்கள் சிவப்பு நிறத்தில் கருப்பு வளையத்துடனும் பெண் பறவைகளின் கண்கள் வெள்ளை நிறத்தில் சிவப்பு வளையத்துடனும் இருக்கும்.
படங்கள்
வெளி இணைப்புகள்
காண்டாமிருக இருவாச்சி – விக்கிப்பீடியா
Rhinoceros hornbill – Wikipedia