இலங்கை சாம்பல் இருவாய்ச்சி

இலங்கை சாம்பல் இருவாய்ச்சி (Sri Lanka grey hornbill, ஓசிசெரோசு ஜின்கேலென்சிசு) என்பது இருவாய்ச்சி குடும்பம் பறவையாகும். இது இலங்கையில் மட்டும் பரவலாகக் காணப்படும் பறவையாகும். இருவாய்ச்சி என்பது வெப்பமண்டல காடுகளில் காணப்படும் தொல்லுலக பாசெரின் பறவைகளாகும்.


வாழ்விடம்


இலங்கை சாம்பல் இருவாய்ச்சி வன வாழ்விடங்களில் காணப்படும் பெரிய அளவிலான பறவையாகும்.


விளக்கம்


இலங்கை சாம்பல் இருவாய்ச்சி 45 சென்டிமீட்டர்கள் (18 in) ) நீளம் வரை வளரக்கூடிய பெரிய பறவை நீளம். இதனுடைய முதன்மை இறகுகள் கருப்பு நிறமுடனும், சாம்பல் நிற அடிப்பகுதியுடன் நுனிப்பகுதியானது பழுப்பு நிறமுடையது. இதனுடைய நீண்ட வால் வெள்ளை நிற பக்கங்களுடன் கருப்பு நிறமாகவும், உள் பகுதிகள் வெண்மையாகவும் இருக்கும். நீண்ட, வளைந்த அலகுகள் கடினமான நுனிகளற்று காணப்படும். ஆண் பெண் இருவாய்ச்சிகள் வேறுபாடின்றி காணப்படு, ஆனால் ஆண்களுடைய அலகானது நுரை வண்ணத்திலும், பெண் பறவைகளுடைய அலகானது கருப்பு நிறத்தில் நுரை வண்ணத்தில் பட்டைகளுடன் காணப்படும். முதிர்ச்சியடையாத பறவைகள் அடர் சாம்பல் நிற மேற்புறங்களுடன், நுரை வண்ண அலகுகளில் வெள்ளை நுனியுடனும் வாலின் நுனியில் நுரை வண்ண கோட்டுடன் காணப்படும். மெதுவாக பறக்கக்கூடியவையாக இருந்தபோதிலும் ஆற்றல் வாய்ந்தவை.


நடத்தை


தடுக்கப்பட்ட மரத் துளை ஒன்றில் நான்கு வெள்ளை முட்டைகள் வரை இடும். முட்டைகள் பொரித்தபின் தாயிற்கும் குஞ்சுகளுக்கும் ஆண் உணவு வழங்குகிறது. இந்த பறவைகள் பொதுவாக இணைகளாக ஒரு கூட்டமைப்பில் ஐந்து பறவைகள் (2 பெரியவர்கள் மற்றும் 2-3 குஞ்சுகள்) கொண்ட சிறிய குழுக்களாக வாழ்கின்றன.


உணவு


இவை பெர்ரி, பழங்கள், பூச்சிகள் மற்றும் சிறிய பல்லிகளை உணவாக உட்கொள்வதைக் காணலாம். இவை பெரும்பாலும் அத்திப்பழங்களை உணவாக உண்ணுகின்றன. எப்போதாவது சிறிய கொறித்துண்ணிகள், ஊர்வன மற்றும் பூச்சிகளைச் சாப்பிடுகின்றன.


வெளி இணைப்புகள்

இலங்கை சாம்பல் இருவாய்ச்சி – விக்கிப்பீடியா

Sri Lanka grey hornbill – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *