கண்கிலேடி ஆங்கிலத்தில் stone-curlew என்றழைக்கப்படும் ஒரு கரையோரப் பறவையாகும் இந்த கண்கிலேடி ஐரோப்பா முழுவதும் காணப்படும் ஒரு இனமாகும்.
உடலமைப்பு
ஆங்கிலப்பெயர் :Stone – Curlew
அறிவியல் பெயர் : Burhinus oedicnemus
41 செ.மீ பருத்த தலையை உடைய இதன் உடலின் மேற்பகுதி கருங்கோடுகளோடு மணல்பழுப்பாக இருக்கும். பெரிய விழிகளும், நீண்ட மஞ்சள் நிறக்கால்களும் கொண்டது.
காணப்படும் பகுதிகள்
மலைப்பகுதிகளைச் சார்ந்த வறள்காடுகள், முட்புதர்களோடு கூடிய தரிசுநிலங்கள், ஊர்ப்புறத்தில் அமைந்த மா முதலான மரங்கள் நிறைந்த காடுகள். நீர்வற்றிய ஆற்றுப் பரப்பு ஆகியவற்றிடையே இணையாகவும் சிறு குழுவாகவும் திரியும்.
உணவு
காலை மாலை நேரங்களில், புழு பூச்சிகள், எலி முதலிய சிற்றுயிர்களை இரையாகத் தேடும் பகலில் மரநிழல், புதர்கள் ஆகியவற்றிடையே ஓய்வுகொள்ளும். வேட்டைகாரர்கள் தேடித் திரியும் போது மிக அருகில் வரும் வரை சத்தமின்றிப் பதுங்கியபடி படுத்துக் கிடந்து பின் எழுந்து பறக்கும். பிக். பிக். பிக். எனக் குரல் கொடுப்பதை அந்தி நெருங்கும் போதும் அதிகாலையிலும் கேட்கலாம்.
இனப்பெருக்கம்
பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை கல்லாந்தரையில் புதர் ஓரமாகவும் புல்மேடுகளிலும் தரையில் சிறு குழியில் 2 முட்டைகள் இடும்.