கரைக் கொக்கு

கரைக் கொக்கு (Reef Heron) தெற்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் பலபகுதிகளிலிலும் பரவலாகக் காணப்படும் கொக்கு வகையாகும். கடற்கரைக்குப் பக்கத்தில் காணப்படும் இவை கொஞ்சம் சாம்பல் நிறத்தில் உடல் அமைப்பைப் பெற்றுள்ளது. தோற்றத்தில் சில சமயங்களில் சின்னக் கொக்குடன் இக்கொக்குவைக் கொண்டு குழப்பிக்கொள்வார்கள்.


விளக்கம்


இப்பறவைகள் சாம்பல் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது. இவற்றில் வயது வித்தியாசத்தில் நிறம் மாறத்துவங்குகிறது. இவற்றின் இனப்பெருக்க காலத்தில் கால்களும்,அலகுகளும் சிவந்து காணப்படுகிறது.


பரவல்


இந்தியாவின் தமிழகப் பகுதியைச் சார்ந்த இந்த பறவை வெப்ப மண்டலப் பகுதிகளான மேற்கு ஆப்பிரிக்கா, செங்கடல், ஈரான் பகுதியில் துவங்கி இந்தியா வரை பரவியுள்ள பாரசீக வளைகுடா பகுதியிலும் காணப்படுகிறது. இலங்கை, லட்சத்தீவு போன்றவற்றிலும் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கிறது. ஸ்பெயின் நாட்டிலும் குறைந்த அளவு பரவியுள்ளது. தென்னமரிக்கா, வட அமெரிக்கா, கரிபியன் கடல் பகுதி போன்ற இடங்களிலும் பரவியுள்ளது. இவற்றின் உணவு வகைகள் பொதுவாக நீரில் வாழும் பூச்சிகள், நண்டுகள், இறால் போன்ற உயிரினங்களை உட்கொள்கிறது. நீர்நிலைகளுக்கு அருகில் பரந்த சமவெளிப்பகுதியில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. சூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை செங்கடல் பகுதில் இனப்பெருக்கம் செய்கிறது. ஆனால் இந்தியாவில் மழைக் காலமான ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலு இனப்பெருக்கம் செய்கிறது. இந்த குறிப்பிட்ட காலங்களில் இலங்கையிலும் கூட்டம் கூட்டமாக இனப்பெருக்கம் செய்கிறது.


வெளி இணைப்புகள்

கரைக் கொக்கு – விக்கிப்பீடியா

Western reef heron – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.