அமேசன் கிளி அல்லது அமேசான் கிளி (Amazon parrot) என்பது அமேசோனா (Amazona) பேரினத்தைச் சேர்ந்த கிளியின் பொதுப் பெயராகும். இவை நடுத்தர அளவுள்ளதும், புதிய உலகத்தை தாயகமாகக் கொண்டதும், தென் அமெரிக்கா முதல் மெக்சிக்கோ, கரிபியன் வரையான இடங்களில் காணப்படுகிறது.
பல அமேசன் கிளிகள் பச்சை நிறமுள்ளவை. இவை விதைகள், கொட்டைகள், பழம் உண்பதுடன், இலை சார்ந்தவற்றையும் உட்கொள்கின்றன.