அனா ஓசனிச்சிட்டு (Anna’s hummingbird, Calypte anna) என்பது நடுத்தர அளவுள்ள, வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப்பகுதியை தாயகமாகக் கொண்ட ஓசனிச்சிட்டு ஆகும். இப்பறவைக்கு அனா மசீனா என்பவரின் பெயரைக் கொண்ட பெயர் அமைந்துள்ளது.
அனா ஓசனிச்சிட்டு 3.9 முதல் 4.3 in (9.9 முதல் 10.9 cm) நீளமுடையது. இது வானவில் போன்று மாறும் பழுப்பு-பச்சை பின்புறத்தையும், மங்கிய சாம்பல் நிறத்தை நெஞ்சு, வயிற்றுப் பகுதிகளிலும், விலாவில் பச்சை நிறத்தையும் கொண்டு காணப்படுகிறது. இதனுடைய அலகு நீண்டு, நேராக, அகன்று காணப்படுகின்றது.
வெளி இணைப்புகள்
அனா ஓசனிச்சிட்டு – விக்கிப்பீடியா