தேனீ ஓசனிச் சிட்டு

தேனீ ஓசனிச்சிட்டு (Bee Hummingbird, mellisuga helenae) என்ற பறவை இனம் ஓசனிச்சிட்டு என்ற வகையைச் சார்ந்ததாகும். இப்பறவை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள் வாழும் உயிரினம் ஆகும். இப்பறவை கியூபா நாட்டின் இரண்டாவது பெரிய தீவான ஐலா டீ லா ஜுவெண்டடு (Isla de la Juventud) பகுதியில் அடர்ந்த காடுகள் நிறைந்த முக்கிய தீவின் முகத்துவாரங்களில் அதிகமாக காணப்படும் ஒரு சிறிய பறவை இனம் ஆகும்.


தன்மை


இப்பறவையின் எடை 2 கிராம் வரை இருக்கும். இதன் நீளம் பெண் 2 அங்குலம், ஆண் 1.75 அங்குலம் அளவுதான் இருக்கும். இப்பறவை நொடிக்கு 80 தடவைகள் இறக்கையை விரிக்கின்றன. இவை அதன் கூடுகளை சிலந்தியின் வலையைக்கொண்டு கட்டிக்கொள்கின்றன.இப்பறவைகளில் பெண்பறவை சிலந்திகளின் நூலாம்படையைக் கொண்டு அதோடு மரப்பட்டை, பச்சை பூஞ்சைகள் சேர்த்து 2.5 செ.மீ(1 அங்குலம்) கூடு கட்டும். இக்கூடு மென்மையான தாவர இலைகளில் கூடுகளைக்கட்டுகிறது. இதன் முட்டை பட்டாணி விதையை விட பெரியதாக இருக்கும். இதில் பெண் பறவை தனியாக அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.


உணவு


அகோர பசி கொண்ட இப்பறவைகள் சிலந்திகளையும், ஈக்களையும், தேனையும், மற்றும் மகரந்த துகள்களையும் உணவாக உண்டு வாழ்கின்றன.


தோற்றம்


இதன் உடல் பகுதி கணக்கிடமுடியாத வண்ணத்திலுள்ள நிறமாக இருக்கும். இதன் அலகு சிகப்பு நிறத்தில் காணப்படுகிறது.


வெளி இணைப்புகள்

தேனீ ஓசனிச்சிட்டு – விக்கிப்பீடியா

Bee hummingbird – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *