கருப்பு வால் கடற்பறவை

கருப்பு வால் கடற்பறவை (Black-tailed Gull) (Larus crassirostris) என்பது நடுத்தர (46 செ.மீ) அளவு கொண்ட நீள் சிறகு கடற்பறவை இனங்களில் ஒன்றாகும் இதன் இறகின் அளவு பொதுவாக 126 செமீ முதல் 128 செமீ வரை வளரும் தன்மைகொண்டது. இவ்வகையான பறவைகள் கிழக்காசியா பகுதியிலும், சீன மக்கள் குடியரசு, சீனக் குடியரசு, ஜப்பான், கொரியா போன்ற பகுதியில் அதிகமாக வாழுகிறது. இப்பறவைகள் வட அமெரிக்கா, அலாஸ்கா, போன்ற நாடுகளில் சுற்றித் திரிகின்றன.


உடலின் தோற்றம்


இப்பறவையின் கால்கள் மஞ்சள் நிறத்திலும், இதன் அலகு சிகப்பும், கருப்பும் கலந்த ஒரு புள்ளியைப்போலவும் கணப்படுகிறது. இதன் குஞ்சுகள் முழு வளர்ச்சி அடைய நான்கு ஆண்டுகள் ஆகும். இதன் வால்பகுதியை வைத்தே இதற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்பறவை பார்ப்பதற்கு பூனைபோல் தெரிவதால் ஜப்பான், நாட்டினர் கடல் பூனை (Umineko) என்றும், கொரியா நாட்டினர் பூனை பறவை, (Gwaeng-yi gull) என்றும் அழைக்கின்றனர்.


உணவு


கருப்பு வால் கடற்பறவை சிறிய மீன்கள், மெல்லுடலி (molluscs), இறால், (crustacean), நண்டுகள், கப்பலின் உடைந்த பகுதியில் கிடைக்கும் பொருட்கள், இறந்த உயிரினங்களின் மாமிசங்களையும் (carrion) உணவாக உண்கிறது. இப்பறவை கப்பல்களையும், வணிக மீன் பிடிக்கப்பல்களையும் பின் தொடர்ந்து செல்வதைக் காணலாம்.


வாழ்வு முறை


இப்பறவைகள் அவற்றின் இணையுடன் ஏப்ரல் மாத மத்தியில் சேர்த்து ஒருகூட்டமாக கூடுகிறது. இவை இரண்டு முதல் மூன்று முட்டைகள் வரை இடுகின்றன. இவை அடைகாத்து குஞ்சு பொரிக்கப் 24 நாட்கள் வரை ஆகின்றன.

வெளி இணைப்புகள்

கருப்பு வால் கடற்பறவை – விக்கிப்பீடியா

Black-tailed gull – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.