நீலப் பைங்கிளி (Psittacula columboides) 38 செ.மீ. – நீலம்தோய்ந்த பச்சை நிற உடலும் இளஞ்சிவப்புத் தலை, முதுகு, மார்பு ஆகியன கொண்ட இதன் கருப்புக் கழுத்தில் பளப்பளப்பான பசுநீல வளையம் காணப்படும். இறக்கையும் வாலும் நீலநிறம். வாலின் முனை மஞ்சள்நிறம். பெண் பறவையின் கழுத்தில் பசுநீல வளையம் இராததோடு முதுகும் சற்றுச் சாம்பல் நிறம் தோய்ந்த பசுமையாக இருக்கும்.
காணப்படும் பகுதிகளும் உணவும்
மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில் பசுமைமாறாக் காடுகளில் 500மீ முதல் 1500மீ வரை காணலாம். மலையடிவாரங்களில் காணப்படும் செந்தலைக் கிளியையும் இதனையும் சில சூழல்களில் ஒன்றாகக் காணலாம். காட்டுவாசிகள் குடியிருப்பைச் சார்ந்த அவர்களது பயிடும் நிலங்களிலும் கைவிடப்பட்ட காபி, ரப்பார் தோட்டங்களிலும் 4 முதல் 5 வரையான குழுவாகத் திரியும். தானியங்கள், விதைகள், கொட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும். இது மலைவாழ்மக்கள் பயிரிடும் நிலங்களிலும் விளைச்சலின்போது அழிவை உண்டு பண்ணும். குரல் முன்னதை ஒத்ததெனினும் சற்றுக் கடூரமான தொனியில் ஒலிக்கும். and possibly further east in the Kolli Hills.
இனப்பெருக்கம்
ஜனவரி முதல் மார்ச் வரை மரங்களில் குடைவுசெய்து 4 முட்டைகள் இடும். மரங்கொத்தி, குக்குறுவான் கூடுகளையும் திருத்தி அமைத்துப் பயன்படுத்தும்.
வெளி இணைப்புகள்
நீலப் பைங்கிளி – விக்கிப்பீடியா
Blue-winged parakeet – Wikipedia