அகன்ற வால் ஓசனிச்சிட்டு (broad-tailed hummingbird; Selasphorus platycercus) என்பது கிட்டத்தட்ட 4 in (10 cm) நீளமுடைய, நடுத்தர அளவு ஓசனிச்சிட்டு ஆகும். இது “செலஸ்போரஸ்” பேரினத்தில் உள்ள ஏழு இனங்களில் ஒன்று ஆகும்.
ஆணும் பெண்ணும் வானவில் வண்ண பச்சை நிறத்தை பின் பக்கத்திலும் தலைப்பகுதியிலும் கொண்டு, வெண்மையான நெஞ்சுப் பகுதியைக் கொண்டிருக்கும். ஆண் பறவை பளபளக்கும் பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்தையுடைய கழுத்து அணிகலன் அமைப்பைக் கொண்டு காணப்படும்.