காதற்கிளி

காதற்கிளி அல்லது காதல் கிளி (budgerigar, Melopsittacus undulatus /ˈbʌdʒər[invalid input: ‘ɨ’]ɡɑːr/) எனப்படுவது ஒரு சிறிய, நீண்ட வால் கொண்ட, விதைகளையும் தானியங்களையும் உண்ணும் கிளி ஆகும். இது ஆத்திரேலியா மெலோசிட்டாகஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரே இனப்பறவையாகும். இது ஆத்திரேலியாவின் கானகம் முதல் வரண்ட இடங்கள் வரை கடுமையான உள்நிலப்பகுதியில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் வருடங்களாக வாழ்ந்து வருகின்றன. இப்பறவைகள் இயற்கையாக பச்சை, மஞ்சள், கருப்பு நிறங்களைக் கொண்டு காணப்படும். ஆயினும் நீலம், வெள்ளை, மஞ்சள், சாம்பல் ஆகிய நிறங்களில் இனப்பொருக்கத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. இக்கிளிகள் சிறிய அளவு, குறைவான விலை, மனிதர் பேசுவதுபோல் பாசாங்கு செய்தல் என்பவற்றால் உலகளவில் இவை பிரபல்யம் மிக்கவை. இவ்வினம் பற்றி முதலில் 1805 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, இன்று நாய், பூனை என்பவற்றுக்கு அடுத்து உலகில் மூன்றாவது செல்லப்பிராணியாகவுள்ளது.


இவற்றையும் பார்க்க


 • பேசும் பறவை

 • வெளி இணைப்புகள்

  காதற்கிளி – விக்கிப்பீடியா

  Budgerigar – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.