கருங்காடை (Buttonquail) இவை பசினெடிய (Phasianidae) என்ற குடும்பத்தில் சார்ந்த காடை வகையைச் சாராத ஒரு சிறிய பறவை பிரிவுகளில் உள்ள மஞ்சள் கால் காடை இனத்தில் சேர்க்கப்பட்ட பறவையாகும். பொதுவாக இந்தியத் துணைக்கண்டம், மற்றும் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசுதிரேலியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இவற்றில் 16 வகையான இனங்களில் இரண்டு இனம் பேரினத்தில் சேருகிறது.
கருங்காடைகள் மங்கிய பழுப்பு நிறம் கொண்ட இவை பறப்பதில்லை, ஆனால் வேகமாக ஓடும் திறன் கொண்டு காணப்படுகிறது. பெண் பறவை இனப்பெருக்கக் காலத்தில் வண்ணம் கூடி பிரகாசமாக காட்சி கொடுக்கிறது. கருங்காடை இனத்தில் ஆண் ஒரு தார மணம் பழக்கத்தில் உள்ளது. ஆனால் பெண் காடைகள் பலகணவர் மணம் செய்துகொள்ளும் பழக்கம் கொண்டுள்ளது. இதனால் நிலத்தில் கூடுகட்டி முட்டையிட்டவுடன் ஆண் பறவை அடைகாத்து குஞ்சு பொரித்து வளர்க்கிறது. ஆனால் பெண் பறவை ஒன்றை ஒன்று பின் தொடர்ந்து வேறு ஆணுடன் சென்றுவிடுகிறது. முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர 12 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. பின்னர் குஞ்சுகள் இரண்டு வாரங்களில் பறக்கத்துவங்குகிறது.