கப்பற்பறவை

கப்பற்பறவை (frigatebirds) கடற்பறவையின் “கப்பற்பறவை” குடும்பம் ஆகும். இவற்றில் 5 இனங்கள் உள்ளன. இவை “போர்ப் பறவை மனிதன்”, “கப்பல் கூழைக்கடா” அல்லது “கடற்கொள்ளை பறவை” எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவை கூழைக்கடாக்களுடன் தொடர்பட்டிருப்பதால், “கப்பல் கூழைக்கடா” எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவை நீண்ட சிறகுகளையும், வால்களையும், அலகுகளையும் கொண்டிருக்கும். ஆண் பறவை தொண்டைப்பகுதியில் இறகற்ற, தோலாளான பை போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இது இனப்பெருக்கக் காலத்தில் துணையினைக் கவர ஊதிப் பெருத்துக் காணப்படும். இவை உணவு, தண்ணீர், ஓய்வு உறக்கமின்றி, தரையிறங்காமல் தொடர்ந்து 400 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் பயணிக்கக்கூடியவை என்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள்.


மேக கூட்டங்களில் 400 முதல் 1000 கிலோ மீற்றருக்கு மேலே திட்டு திட்டாக தெரியும் குவி மேகத்திற்கு மேலே பறந்து சென்று இறக்கையை விரித்து பல கிலோமீற்றர்கள் சகதியை இழக்காமல் கடந்து செல்லும் திறன் பெற்றுள்ளது. மற்ற பறவையைப்போல் இல்லாமல் இதன் இறக்கைகளில் தண்ணீர் ஒட்டுவதால் வாத்தைப்போல் தண்ணீரில் மிதக்கவோ, முக்குளிப்பான் போல் தண்ணீரில் நீந்தவோ முடியாது. இப்பறவை எங்கு தூங்குகிறது என்று இன்மும் கண்டுபிடிக்கப்படவில்லை.


வெளி இணைப்புகள்

கப்பற்பறவை – விக்கிப்பீடியா

Frigatebird – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.