கேன்னட்டு (Gannet) என்பது சுலிடே குடும்பத்தில் மோரசு என்னும் பேரினத்தைச் சேர்ந்த ஒரு கடற்பறவை. இவை பூபிக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. கேன்னட்டு என்னும் பெயர் கேனோட்டு என்னும் பழைய ஆங்கிலச் சொல்லில் இருந்து பிறந்தது. இதன் பொருள் வலிமையுள்ள அல்லது ஆண்மையுள்ள என்பதாகும்.
கேன்னட்டுகள் அளவில் பெரிய பறவைகள். உடல் வெண்ணிறத்திலும் தலை மஞ்சள் படிந்தவாறு இருக்கும். இறக்கைகளின் ஓரம் கருப்பாகவும் அலகு நீண்டும் இருக்கும். வட அத்திலாந்திக் கடற்பகுதியில் காணப்படும் வடக்கத்திய கேன்னட்டு என்னும் பறவை கேன்னட்டுகளிலேயே பெரியது. இறக்கை விரித்த நிலையில் இதன் அகலம் இரண்டு மீட்டர் (6.6 அடி) வரை இருக்கும். இது கால்கள் கொய்யடிகளைக் (சவ்வால் இணைந்த காலடி) கொண்டுள்ளன.
இப்பறவைகள் மேலிருந்து நீருக்குள் வேகமாகப் பாய்ந்து மீன்களை வேட்டையாடும். இதற்கு ஏற்றவாறு இவை கீழ்க்கண்ட தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.