ஜப்பானியக் காடை (Coturnix quail, [Coturnix japonica]) என்பது கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஓர் காடை இனமாகும். இவை இடம்பெயரக்கூடிய பறவைகள் ஆகும். மஞ்சூரியா, தென் கிழக்கு சைபீரியா மற்றும் வடக்கு ஜப்பான் ஆகிய இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. பனிக்காலங்களில் இவை தெற்கு ஜப்பான், கொரிய தீபகற்பம் மற்றும் தெற்கு சீனாவிற்கு இடம் பெயர்கின்றன. இவை புல்வெளிகள் மற்றும் விளைநிலங்களில் வசிக்கின்றன. ஜப்பானியக் காடையின் இறகுகள் மஞ்சள் பழுப்புப் புள்ளிகளுடனும், கண்களின் மேற்புறம் வெள்ளைக் கோட்டுடனும் காணப்படுகிறது.
ஜப்பானியக் காடைகளின் பயன்பாடு
ஜப்பானியக் காடைகள் இறைச்சிக்காகவும், முட்டைகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.