ஆந்தைக் கிளி

ஆந்தைக் கிளி அல்லது காக்காப்போ ( kakapo (மாவோரி மொழி: kākāpō அல்லது இரவுக் கிளி ), Strigops habroptilus (Gray, 1845), என்பது, ஒரு வகைக் கிளி ஆகும். இது ஒரு பறக்காத பறவையாகத் தரையில் வாழக்கூடிய ஒரு இரவாடி இவை நியூசிலாந்தில் காணப்படக்கூடிய அகணிய உயிரினமாகும்.


இவை மஞ்சள், பச்சை கலந்த நிறத்துடன், பூனை மீசை போன்று வாயைச் சுற்றி முளைத்துள்ள மயிர் போன்ற இறகுகள், பெரிய சாம்பல் நிற அலகு, குறுகிய கால்கள், பெரிய கால் அடிகளை உடையவை. இவற்றின் இறக்கைகள் மற்றும் வால் ஒப்பீட்டளவில் குறுகிய நீளமுடையவை. இது உலகின் ஒரே பறக்கமுடியாத கிளியாக இருக்கிறது, இவை உடல் பருமன் கொண்டவை; இரவு நேரங்களில் மட்டும் திரியக்கூடிய தாவர உண்ணிகளாகும். மேலும் இவ்வினப் பறவைகள் உடல் தோற்றத்தில் பால் ஈருருமை தோற்றம் உடையவை, இவை உலகில் நீண்டநாள் வாழும் பறவைகளில் ஒன்றாகும். சில கிளிகள் 120 ஆண்டுகள்வரைகூட உயிர் வாழும். நியூசிலாந்தின் பல பறவை இனங்களைப் போலவே, ஆந்தைக் கிளியும் மாவோரி மக்களின் பழங்குடி வாழ்வில் வரலாற்று சிறப்புமிக்கதாக, பாரம்பரியப் புனைவுகள் மற்றும் நாட்டுப்பறவியல் முக்கியத்தவம் மிக்கதாக இருந்தது. இவை இந்தப் பழங்குடி இனத்தவரால் வேட்டையாடப்பட்டு பல வகையில் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் இறைச்சி உணவுத் தேவைக்கும், இவற்றின் சிறகுகள் ஆடைகளை மதிப்பு மிக்கதாக மாற்றுவதற்கும் இம்மக்களுக்குப் பயனுள்ள பொருள்களாக இருந்தன.


வெளி இணைப்புகள்

ஆந்தைக் கிளி – விக்கிப்பீடியா

Kakapo – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.