குட்டைக் கிளி அல்லது கன்னிக்கிளி (Lories, lorikeets) என்பது சிறிது முதல் மத்திய அளவு வரையான மரங்களில் வாழும் கிளிகள் ஆகும். இவற்றின் தூரிகை முனை அமைப்பு நாக்கு பூக்களில் உள்ள மலர்த்தேன், பழங்கள் போன்றவற்றை உண்ண அமைந்துள்ளன. இவ்வினப் பறவைகள் ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றம் குழுவையும் கிளிக் குடும்பத்தையும் சேர்ந்தவை. பாரம்பரியமாக, இவை லொரினே (Loriinae) துணைக்குடும்பமான கருதப்பட்டன. ஆனால் சமீபத்தில் வேறு குழு குழுவாக கருதப்படுகின்றன. இவை பரவலாக ஆஸ்திரலேசியா பிரந்தியத்தில், குறிப்பாக தென் கிழக்கு ஆசியா, பொலினீசியா, பப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், ஆத்திரேலியா ஆகிய இடங்களில், பிரகாசமான நிறங்களில் காணப்படுகின்றன.
About the author
Related Posts
July 12, 2021
நடுங்கும் மரம்
September 17, 2021
பக் நாய்
October 11, 2021