அட்லாண்டிக் கடற்பறவை

அத்திலாந்திக்குக் கடற்பறவை (Olrog’s Gull), (Larus atlanticus) என்று அழைக்கப்படும் கடற்பறவையானது நீள் சிறகு கடற்பறவையைப்போல் அத்திலாந்திக்குக் கடல் பகுதியில் அமைந்துள்ள பிரேசில், உருகுவே, அர்ஜெண்டீனா போன்ற நாடுகளின் கடற்கரையோரமாக காணப்படுகிறது. இப்பறவையானது பட்டைவால் கடற்பறவை இனத்தின் ஒரு வகையாகும். இதன் இறகுப்பகுதி கருப்பு நிறத்திலும், இதன் தலைப் பகுதி வெள்ளை நிறத்திலும், இதன் அலகுப்பகுதி மேலே கருப்பும், கீழே சிகப்பும் கலந்து காணப்படுகிறது. இப்பறவைக்கு சுவீடன் மற்றும் அர்ஜெண்டீனா உயிரியளாலர் கிளேயஸ் சி ஒல்ரொக் (Claes C. Olrog) நினைவாக இப்பெயர் வந்தது. இப்பறவையின் இனவளத்திற்கான பறவை பாதுகாப்பு இயக்கம் அழியும் நிலை கொண்ட இனமாக பிரித்திருக்கிறது.


விளக்கம்


இப்பறவையானது கடற்பறவைகளில் பெரிய வகையானதாகும். இதன் நீளம் 50 செமீ முதல் 60 செமீ இருக்கும். இதன் இறகுகள் 130 செமீ முதல் 140 செமீ வரை வளருகின்றன. ஆண் பறவை சிறியதாகவும் இறகுகள் நீண்டும் காணப்படும்.


பங்கீடு


அர்ஜெண்டீனா நாட்டின் பலாங்கா ஆற்றில் (Bahia Blanca River) கழிமுகப்பகுதில் ஒதன் காலனிகள் ஒன்றிரண்டு காணப்படுகுகிறது. இப்பறவை தீவுகளிலும், கடற்கரையின் கழிமுகப்குதிகளிலும் கூடுகட்டி வாழுகின்றன.


நடத்தை


வெளி இணைப்புகள்

அத்திலாந்திக்குக் கடற்பறவை – விக்கிப்பீடியா

Olrog’s gull – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.