பசிபிக் கடற்பறவை (Larus pacificus) ஆஸ்திரேலியா கடற்கரையை ஒட்டி வாழும் ஒரு பெரிய உருவம் கொண்ட பறவையாகும். இப்பறவை பொதுவாக ஆஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியான கார்னவனிலும் சிட்னி பகுதியிலும் 1940ம் ஆண்டுகளிலிருந்து கடல் பாசி நிற கடற்பறவையுடன் (Kelp Gull) காணப்படுகிறது. இவை விள்ளி நிற கடற்பறவை, மற்றும் போது உருவ கடற்பறவை போல் இந்த பசிபிக் கடற்பறவையும் கடற்கரையின் ஓரங்களில் கிடைக்கும் மட்டி என்ற கிளிஞ்கல் போச்சிகளையும், கடல் முள்ளெலி என்று அழைக்கப்படும் உயிரிணத்தையும் உணவாக தேடி உண்ணுகிறது.
வகுப்பு முறை
1802ம் ஆண்டுகளில் ஆங்கில இயற்கை வரலாற்று அறிவியலார் ஜான் லாதம் என்பவர் டூ-காட்-டேல் (Troo-gad-dill) என்ற பெயரை ஆவணப்படுத்தியுள்ளார். ஆனாலும் இதன் மறுபெயர் பசிபிக் கடலையே குறிக்கிறது.
பசிபிக் கடற்பறவை இனங்களில் இரண்டு இனங்கள் காணப்படுகிறது. அவற்றில் ஒன்று மேற்கு ஆஸ்திரேலியா இனம் மற்றும் ஒன்று தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில் காணப்படும் இனம். இப்பறவைகளின் மூக்கு துவாரங்களின் வழியாக உப்பு நீர் சுரப்பிகள் காணப்படுகிறது.
விளக்கம்
பசிபிக் கடற்பறவையானது சிறிய வகையான கடல் பாசி வகை கடற்பறவையைப் (Kelp Gull) போன்றே காணப்படுகிறது. இப்பறவைகள் 58 செ.மீ முதல் 66 செ.மீ வரை நீளம் உள்ளதாகவும், இதன் இறக்கைகள் 135முதல் 157 செ.மீ. நீளம் கொண்டவையாக இருக்கிறது. இப்பறவைகள் பொதுவாக 900 கிராம் முதல் 1,180 கிராம் கொண்டவையாக உள்ளது.900 முதல் 1,180 g (1.98 முதல் 2.60 lb). இப்பறவைகள் பெரும்பாலும் மேல் பகுதில் சிகப்பு கலந்த மஞ்சள் நிறத்தைப் போர்த்தியது போலும், மற்ற பறவை இனங்கள் ஒப்பிடும் போது அடர்ந்த சாம்பல் நிறத்திலும் காணப்படிகிறது.