இந்திய துணைகண்டத்தில் மட்டுமே காணப்படும் ஒரு கிளி இனம் செந்தலைக் கிளி ஆகும்.
உடலமைப்பு
36 செ.மீ. – நீலந்தோய்ந்த சிவப்பு நிறத்தலையும் மஞ்சள் நிற அலகும். வாலின் நுனி வெண்மையும் இதனை அடையாளங்கள் கண்டு கொள்ள உதவுபவை. இறக்கைகளில் சிவப்புத் திட்டும் காணப்படும். பெண்ணின் தலை சற்று மங்கிய நிறங்கொண்டது.
காணப்படும் பகுதிகள் ,உணவு
தமிழகம் எங்கும் ஆங்காங்கே இலையுதிர்காடுகள் அதனைச் சார்ந்த விளை நிலங்கள், பழத்தோப்புகள், வீட்டுத் தோட்டங்கள் ஆகியவற்றில் 5 முதல் 10 வரையான குழுவாகத் திரியும். மனிதர் வாழ்விடங்களை அதிகம் விரும்புவதில்லை. வேகமாக அம்புபோலப் பறக்கும் இது கூட்டமாக, விளைந்த வயல்களில் விழுந்து கதிர்களைப் பாழ்ப்படுத்துவதோடு, பழத்தோட்டங்களிலும் கேடு செய்யும், தூஇ.. எனக் கூப்பிடுவது போலக் குரல் கொடுக்கும். கூட்டமாகப் புதர்களிடையேயும் அடர்ந்த இலைகளுடைய தோப்புகளிலும் இரவில் அடையும்.
இனப்பெருக்கம்
ஜனவரி முதல் ஏப்ரல் முடிய அடிமரம் அல்லத பெரிய கிளைகளில் ஆழமாகக் குடைவு செய்து 4 அல்லது 5 முட்டைகள் இடும்.