கடல் கிளி

கடற்கிளி (Puffin) எனும் நீர் மூழ்கிப் பறவை, புவியின் துருவப் பகுதியாகிய ஆர்டிக் கடல் பகுதியில் வாழக் கூடிய நீர் பறவையாகும். இவை அல்சிடே குடும்பத்தில் இடம் பெறுகிறது. கடற்கிளிகள் கூட்டம் கூட்டமாக கடற்கரைப் பகுதி தீவுகளில் உள்ள பாறைகளின் முகடுகளில் காணப்படும்.


கடல் கிளியின் வேறு பெயர்கள்


 • பபின்

 • சீசாமூக்கு பறவை

 • போப்

 • வகைகள்


 • அட்லாண்டிக் கடற்கிளி

 • கொம்புள்ள கடற்கிளி

 • குஞ்சமுள்ள கடற்கிளி

 • உடலமைப்பு


  கடல் கிளியின் உடல் வலிமையானது, தலை பொியது, அலகு கிளிபோல பெரியதானது. மேலும் முக்கோண வடிவமும், ஒளிர் வண்ணமும் கொண்டது. இதன் அலகு நிறம் மாறக்கூடிய தன்மை கொண்டது. குளிர் காலத்தில் இளஞ்சாம்பல் நிறத்திலும், வசந்த காலத்தில் ஆரஞ்சு வண்ணத்திலும் அலகு காணப்படும்.


  இனப்பெருக்கம்


  இனப்பெருக்க காலத்தில் ஆண் கடற்கிளியின் அலகு பல நிறங்கொண்டதாகக் காணப்படுகிறது. இக்காலத்தில் (சூன்,; சூலை) நிலப்பகுதியை நோக்கி வருகின்றன. பாறைகளில் உள்ள ஏறத்தாழ மூன்று முதல் ஆறு அடி பள்ளங்களிலும் பொந்துகளிலும் பெண் பறவைகள் முட்டை இடுகின்றன. ஆறு வாரங்களில் முட்டை பொாித்து குஞ்சு வெளிவருகிறது.


  தாய்ப் பறவை குஞ்சுகளைப் பேணுதல்


  தாய்ப் பறவை ஏறத்தாழ பத்து சிறிய மீன்களை ஒரே தடவையில் வாயால் பிடித்து அலகில் அடுக்கி வைத்துக் கொண்டு குஞ்சு இருக்கும் இடத்தை நோக்கிப் பறந்து வரும். மீன் ஊட்டப்பட்டு, உடல் நன்கு வளர்ந்த ஆறு வாரங்களில் தாய் குஞ்சுகளை விட்டுச் சென்று விடும். குஞ்சுகள் உடல் மெலிந்து பறப்பதற்கான இறகுகள் வளரும் வரை காத்திருந்து பின்பு கடலை நோக்கிப் பறக்கத் தொடங்கும். இக்குஞ்சுகள் கடல் வாழ் உயிாிகளில் மீன்களை உணவாக உட்கொள்கின்றன.


  வெளி இணைப்புகள்

  கடல் கிளி – விக்கிப்பீடியா

  Puffin – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.